ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (10:51 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஞானசேகருக்கு, சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ஞானசேகரன் குற்றவாளி என்றும், அவர் மீதான 11 குற்றச்சாட்டுகளும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாகவும் தீர்ப்பு வழங்கினார்.
 
மேலும், இன்று அவருக்கான தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு  தந்தை இல்லை, உடல்நலமில்லாத தாய் மட்டுமே இருப்பதால் தனது தண்டனை குறைக்க வேண்டும் என்றும், தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
 
ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்கு குறைவில்லாத தண்டனை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்