Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

சீமானா? கமலா? கன்ஃப்யூஷனில் அழகிரி: அப்செட்டில் ஆதரவாளர்கள்

Advertiesment
அழகிரி
, வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (16:06 IST)
கருணாநிதி மறைவின் போது, திமுகவில் இணைவதற்காக பல விஷயங்களை செய்தார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை. 
 
அதன்பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் போட்டியிடுவார் தனது அரசியல் ஆதிக்கத்தை காண்பிப்பார் என்று எல்லாம் பேசப்பட்டது, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் 4 தொகுதி சட்டசபை தேர்தல்களில் ஸ்டாலினை வீழ்த்த சீமான், கமல்ஹாசனுடன் அழகிரி கை கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் இது குறித்து அழகிரி ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து வேறு மாதிரியான தகவல்கள் வெளிவருகிறது. அதாவது, திருப்பரங்குன்றம் உட்பட 4 தொகுதி தேர்தல்கள் குறித்து எதுவும் பேச வேண்டாம் என அழகிரி கட்டளையிட்டுள்ளாராம். 
 
இரண்டு நாட்கள் பொருத்திருங்கள். அதன் பின்னர் நான் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளாராம். தீவிரமாக செயல்பட வேண்டிய தேர்தல் நேரத்தில் இப்படி அமைதியாக இருக்க சொல்கிறார் என அவரது ஆதரவாளர்கள் அப்செட்டில் உள்ளனராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாசமா ஆட வெச்சு சம்பாதிச்சாங்க: பெண் இன்ஸ்பெக்டரின் மகள் பகீர் புகார்!!!