Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாசமா ஆட வெச்சு சம்பாதிச்சாங்க: பெண் இன்ஸ்பெக்டரின் மகள் பகீர் புகார்!!!

Advertiesment
ஆபாசமா ஆட வெச்சு சம்பாதிச்சாங்க: பெண் இன்ஸ்பெக்டரின் மகள் பகீர் புகார்!!!
, வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (15:50 IST)
சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரின் மகள் தனது தாய் தந்தை தன்னை கொடுமைபடுத்துவதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.
 
இந்நிலையில் ராஜலட்சுமியின் மகள் கேண்டி, செய்தியாளர் சந்திப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை  துபாய்ல இருக்க ஒரு பார்-ல் டான்ஸ் ஆடவெச்சு பணம் சம்பாதிச்சாங்க. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அங்க இருந்து ஓடி வந்துட்டேன்.
 
எங்க அண்ணியையும் வரதட்சணை கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க எங்க அம்மாவும் அப்பாவும், என்னொட உயிருக்கு அவங்கனால ஆபத்து இருக்கு. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. அவுங்ககிட்ட இருந்து என்ன காப்பாத்தனும் என அவர் கூறியுள்ளார்.  பெண் போலீஸ் மீது அவரது மகளே புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் சென்ற விமானத்தில் எஞ்சின் கோளாறு – பாதி வழியில் கண்டுபிடிப்பு !