தேர்தல் நேரத்தில் கமல்ஹாசனுக்கு உதவி செய்தாரா ரஜினிகாந்த்?

வியாழன், 25 ஏப்ரல் 2019 (22:24 IST)
கமல்ஹாசன் வாய்விட்டு கேட்டும் அவருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதில் ரஜினிகாந்த் கடைசி வரை உறுதியாக இருந்தார்
 
இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஒரு முக்கிய உதவியை ரஜினிகாந்த் செய்ததாக கூறப்படுகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடியதாம். பலரிடம் கமல்ஹாசன் கடன் கேட்டதாகவும், ஆனால் யாரும் அவர் கேட்ட பெரிய தொகையை கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது
 
இதுகுறித்து கமல் கூறாமலேயே அறிந்து கொண்ட ரஜினிகாந்த், தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு அரசியல்வாதியிடம் கமலுக்கு உதவுமாறு கூற, உடனே அவர் ஒரு பெரிய தொகையை கமலுக்கு கொடுத்தாராம். இதற்காக ரஜினிக்கு போன் செய்து கமல் நன்றி கூறியதாகவும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் கசிந்து வருகிறது.

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சூர்யாவுடன் மோதும் விஜய்-பிரபுதேவா கூட்டணி!