பட்டுக்கோட்டை அருகே பன்னிரண்டாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக ஐடி விங் நிர்வாகி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயது தீபன் என்பவர் அதிமுக ஐடி வின் பொறுப்பில் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகவும், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் பள்ளிக்கு செல்லும் சிறுமியை வழிமறித்து மீண்டும் மீண்டும் கிண்டல் செய்த அத்துமறியதால் ஆத்திரமடைந்த சிறுமி நேற்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.