Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் கட்சி பாஜகவின் சி-டீம்..! அதிமுகதான் விஜய்யின் டார்கெட்! - அமைச்சர் ரகுபதி!

Advertiesment
Minister Raghupathi

Prasanth Karthick

, திங்கள், 28 அக்டோபர் 2024 (09:42 IST)

நேற்று நடந்த த.வெ.க மாநாட்டில் திராவிட மாடலை விஜய் விமர்சித்தது குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், தமிழகத்தில் திராவிட மாடல் என்று ஏமாற்றி ஒரு குடும்பத்தினர் கொள்ளையடித்து வருவதாக தாக்கி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 2026 சட்டமன்ற தேர்தல் உதயநிதி - விஜய் மோதலாக இருக்குமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் விஜய்யின் பேச்சு அதற்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது.

 

இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைச்சர் ரகுபதி “தமிழக மக்களிடம் இருந்து திராவிட மாடலை பிரிக்க முடியாது. திராவிட மாடலை திட்டிக் கொண்டே தனது கொள்கையில் எங்களது கொள்கைகளை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார் விஜய்.
 

 

விஜய்யின் கட்சி பாஜகவின் ஏ டீமோ, பி டீமோ அல்ல.. அது பாஜகவின் சி-டீம். அதிமுகவை வைத்து திமுகவை அழிக்க பார்த்தார்கள். அது பாஜகவால் முடியவில்லை. அதனால் தற்போது விஜய்யை இறக்கியுள்ளார்கள். நலிவடைந்த அதிமுகவில் இருந்து தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதே விஜய் கட்சியின் டார்கெட்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் விரக்தி! பிரபல யூட்யூபர் தம்பதி தற்கொலை!