எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

Mahendran
புதன், 26 நவம்பர் 2025 (12:32 IST)
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று  தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா செய்தார்.
 
மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை தொடர்ந்து செங்கோட்டையன் ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் பலம் 63 ஆக குறைந்துள்ளது. 
 
கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ளவரும், எட்டு முறை வெற்றி பெற்றவருமான செங்கோட்டையன், ஓபிஎஸ் - இபிஎஸ் பிளவுக்கு பின் கட்சி ஒருங்கிணைப்பு பற்றி பேசியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
 
தற்போது, அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தாவல் தடைச் சட்டத்தின் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என்று அவர் பதிலளித்தார். இதன் மூலம், அவர் வேறு கட்சிக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments