2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

Siva
புதன், 26 நவம்பர் 2025 (12:26 IST)
உலகிலேயே 60 லட்சத்தில் ஒரு பிறப்பில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை பிறப்புக் குறைபாடான 'டைஃபாலியா' காரணமாக 2 ஆணுறுப்புகளுடன் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
பாகிஸ்தானில் பிறந்த ஒரு குழந்தை இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்திருந்தது. இரண்டின் வடிவமும் சாதாரணமாகவே இருந்தது. ஒன்றின் நீளம் 2.5 செ.மீ. மற்றொன்றின் நீளம் 1.5 செ.மீ. ஆக இருந்தது. மேலும், இரண்டுக்கும் தனித்தனி சிறுநீர் குழாய் திறப்புகள் இருந்தன.
 
குழந்தை இரண்டு பிறப்புறுப்புகள் வழியாகவும் சிறுநீர் கழிக்க முடிந்தது. ஸ்கேன் பரிசோதனையில் இரண்டு சிறுநீர் குழாய்கள் ஒரே சிறுநீர்ப் பையில் இணைந்திருந்தது தெரியவந்தது.
 
ஆனால் பிறக்கும்போதே அந்தக் குழந்தைக்கு மலக்குடலில் திறப்பு இல்லை என்பதும் ஒரு அதிர்ச்சியான தகவல். இந்த நிலையில் முதலில் குழந்தைக்கு உணவு செரிமானம் மற்றும் கழிவுகள் வெளியேற்றத்தில் இருந்த சிக்கல்களை சரிசெய்ய மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
அதன்பின் குழந்தையின் ஒரு ஆணுறுப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
 
கர்ப்ப காலத்தின் 3வது மற்றும் 6வது வாரங்களுக்கு இடையில் ஏற்படும் வளர்ச்சி கோளாறுகளால் இதுபோன்ற நிகழ்வு நிகழலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments