Publish Date: Wed, 05 Jun 2019 (20:28 IST)
Updated Date: Wed, 05 Jun 2019 (20:32 IST)
பட்டுக்கோட்டையில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று தேர்ச்சி அடைய முடியாமல் போன விரக்தியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 5 அன்று மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழகத்திலிருந்து எழுதியவர்களில் 48.57 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. முன்னதாக திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வைஷியா என்ற மாணவி விரக்தியில் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
Publish Date: Wed, 05 Jun 2019 (20:28 IST)
Updated Date: Wed, 05 Jun 2019 (20:32 IST)