அதிமுக அவைத்தலைவர் கடிதத்தை ஏற்க ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதத்தில் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்
இது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்றும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும் ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தென்னரசு என தன்னிச்சையாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வேட்பாளராக அறிவித்துள்ளார் என்றும் பொதுக்குழு தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதற்கு மாறாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் ஓபிஎஸ் தரப்பின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.