உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் தரப்பினர் அவரது இல்லத்தில் ஆலோசனை செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய போது ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவரது வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அடுத்த கட்ட முடிவை எடுப்போம் என்றும் ஏற்கனவே நடந்த பொதுக்குழு செல்லாது என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இபிஎஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே தென்னரசு தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.