செங்கல்பட் அருகே கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்ததாக காதலனை சிக்க வைக்க நாடகமாடிய இளம்பெண் போலீஸார் விசாரணையில் சிக்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் என்ற பகுதியில் நேற்றிரவு கிருஷ்ணவேணி என்பவரின் வீட்டின் கதவை இளம்பெண் தட்டியுள்ளார்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் போலீஸில் இதுபற்றிக் கூறும்படி தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணை மீட்டு அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு சலீம் என்பவருடன் காதல் ஏற்பட்டதாகவும், பல அவரிடம் திருமணம் செய்யும்படி கூறியும், அவர் ஒப்புக் கொள்ளாததால், அவர் தன்னைபாலியல் வன் கொடுமை செய்ததாகக் கூறி நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.