பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மை பணியாளர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 12 நாட்களை கடந்து தீவிரமடைந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்காத நிலையில், நடிகை அம்பிகா போராட்ட களத்திற்கு நேரடியாக வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.
ஏற்கனவே, பாடகி சின்மயி, நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று நடிகை அம்பிகா, போராட்டக் களத்தில் சில நிமிடங்கள் கலந்துகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
"12 நாட்களாக போராடி வரும் இந்தப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" என்று அம்பிகா கோரிக்கை விடுத்தார். திரைத்துறை பிரபலங்களின் தொடர்ச்சியான ஆதரவு, தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்து வருகிறது.