டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்ட ஊர்வலத்தில் ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா திடீரென மயங்கி விழுந்தபோது அவரை கைத்தாங்கலாக ராகுல் காந்தி பிடித்து கொண்டார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தின் மகர துவாரில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எம்.பி.க்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, "வாக்கு திருடன்" என்று முழக்கமிட்டு, 2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் "வாக்குத் திருட்டை" கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இந்த போராட்டத்தின்போது மகுவா மொய்த்ரா எம்பி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. அப்போது ராகுல் காந்தி மற்றும் சாகரிகா கோஸ் ஆகிய இருவரும் அவர் மயங்கி கீழே விழாதவகையில் கைத்தாங்கலாக பிடித்து கொண்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.