பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார் நடிகர் விஜய். 
	
 
									
										
								
																	
	 
	பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.  
	 
 
									
										
			        							
								
																	
	இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 
	 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	அந்த வகையில் நடிகர் விஜய் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார்.