Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? - சுந்தர்.சி யை விளாசித் தள்ளிய பிரகாஷ்ராஜ்

Advertiesment
நடிகர் பிரகாஷ் ராஜ்
சினிமா படப்பிடிப்பில் இருந்துவிட்டு திடீரென வந்து எம்.எல்.ஏ. ஆக நினைத்தால் மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா என நடிகர் பிரகாஷ்ராஜ் எழுப்பியுள்ள சரமாரி கேள்விகள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக தேர்டலுக்கு இன்னும் இரு தினக்களே உள்ள  நிலையில் அரசியல் கட்சிகள் மின்னல்  வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில்  நடிகர் பிரகாஷ்ராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சுந்த சி யை கடுமையாக தாக்கி பேசினார். அவ்ர் பேசுகையில்,
 
நீங்கள் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் தான் பிஸியாக இருந்தீர்கள். எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவோ, அல்லது மதுரை மக்களுக்காகவோ நீங்கள் இதுவரை குரல் கொடுத்ததில்லை. திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், நேரடியாக வந்து எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்று நினைத்தால், மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? என்று  கேட்டுள்ளார்.
 
 
மேலும் தொடர்ந்த அவர், புதிய நீதிக்கட்சியில் நீங்கள் இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அந்தக் கட்சியின் கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு மாற்றம் என்பது முன்னேற்றத்துக்கான மாற்றமாக இருக்க வேண்டும்; அது மக்களுக்கான ஏமாற்றமாக மாறிவிடக் கூடாது என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டசபை தேர்தல்!.. அதிக கடன் வைத்திருக்கும் டாப் 3 வேட்பாளர்கள்!..