Publish Date: Mon, 20 Apr 2026 (11:46 IST)
Updated Date: Mon, 20 Apr 2026 (12:12 IST)
பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜயின் மனைவி சங்கீதா இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் கடந்த பல வருடங்களாகவே தனது மனைவி, குழந்தைகளுடன் வசிக்கவில்லை என்கிற செய்தி தொடர்ந்து வெளிவந்த நிலையில் சங்கீதாவின் விவாகரத்து அதை உறுதிப்படுத்தியது..
கடந்த சில வருடங்களாகவே சங்கீதா லண்டனிலும், அவரின் மகன் மற்றும் மகள் இருவரும் சென்னையில் தனித்தனி இடங்களிலும் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தநிலையில்தான் சங்கீதா விவாகரத்து மனு தொடர்ந்தார். அதில் விஜய்க்கு ஒரு நடிகையுடனும் தொடர்பு இருப்பதாகவும், அந்த தொடர்பை அவர் துண்டிக்க விரும்பவில்லை என்பதால் விவாகரத்து கோருவதாக கூறியிருந்தார். அதோடு கள்ளத்தொடர்பு பற்றி பிரச்சினை வந்தபோது தன்னை பொருளாதார ரீதியாக முடக்கியதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை எனவும் அவர் அந்த விவாகரத்து மனுவில் கூறியிருந்தார்..
இதற்கு எந்தவித விளக்கமும் விஜய் கொடுக்கவில்லை. தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது அது ஒன்னும் அவ்வளவு வொர்த் இல்லை என லெப்ட் ஹேண்டில் செய்தார் விஜய். இது பல பெண்களுக்கு அவரின் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான், சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் விவாகரத்து கேட்டு மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. சங்கீதா மட்டுமே விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செயய்வில்லை என்பதால் வழக்கு ஜுன் 15ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.