தம்பி கருணாஸா இப்படி பேசினார்? ஆச்சரியப்படும் நடிகர் கார்த்திக்

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:35 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே ஒருசில நடிகர்களும், அரசியல்வாதிகளும் ஜாதியை மையமாக வைத்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகரும் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் இதுகுறித்து கூறியதாவது: கருணாஸ் தம்பி இப்படியா பேசினார்? எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தமிழத்தில் வீரர்களுக்கு குறைவில்லை. ஆனால் நேருக்கு நேராக நின்று போராடுவார்களே வீரர்கள். கோழைத்தனமாக கொலை செய்பவர்கள் வீரர்கள் அல்ல.

இந்தியா முழுவதும் நிராயுதபாணியாக இருப்பவர்களை குறி வைத்து கொலை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. யாராக இருந்தாலும் கொலை செய்வது என்பது கோழைத்தனம். முக்குலத்து மக்கள் எந்த நேரத்திலும் நேரடியாக நின்று போராடுவார்களே தவிர கோழைத்தனமாக கொலை செய்ய மாட்டார்கள். கருணாஸ் பேசியதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. அதனால் நான் அதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். நியாயத்திற்காக போராடும் நாம் அனைவருமே வீரர்கள்தான். நம்மில் யாரையும் பிரித்து பார்க்க வேண்டாம்' என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments