தென் இந்திய சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளை ஒன்றிணைத்து "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்இ கிளஸ்டரின் 6 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில் இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.
பாண்டிச்சேரி, அந்தமான். மற்றும் தமிழகத்திள் உள்ள சுமார் 500 கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை சார்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் அடங்கிய 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஆண்கள் அணியில் 14 வயது பிரிவில் சச்சிதாநந்தா ஜோதி பள்ளியும், 17 வயது பிரிவில் ஜெயின் பப்ளிக் பள்ளியும்,19 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றது.
அதே போன்று பெண்கள் அணியில் 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 17 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 19 வயது பிரிவில் ஒஎன்ஜிசி பள்ளியும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் கோப்பையையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இந்திய அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் பங்கு பெறுவார்கள், என சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்தனர்.