இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரும், இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவருமான சாய்னா நேவால், தனது கணவர் பருப்பள்ளி காஷ்யப்பை பிரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமான அவரது சமூக வலைதளப் பதிவில், "சில சமயங்களில் வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்து செல்கிறது. நிறைய யோசித்து, கலந்தாலோசித்து, அதன் பிறகுதான் நான் என் கணவரை பிரிய முடிவு செய்துள்ளேன். எங்கள் இருவரின் அமைதி, வளர்ச்சி மற்றும் எதிர்கால நன்மையை கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே, எங்களது தனிப்பட்ட விஷயங்களை புரிந்துகொண்டு எங்களை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவு செய்துள்ளார்.
இது சம்மந்தமான பதிவில் “சில நேரங்களில் தூரமாக செல்லும்போதுதான் நமக்கு இருப்பின் மதிப்பு தெரிகிறது. இதோ –நாங்கள் மீண்டும் முயற்சிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.