ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே ஆர் சி பி அணி எப்போது கோப்பையை வெல்லும் என்பதுதான் பலருக்கும் இருந்த கேள்வி. ஒருவழியாக 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு ஆர்.சி.பி. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது ரஜத் படிதார் தலைமையிலான அணி.
ஆனால் அந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலையில் அந்த அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவம் ரசிகர்கள் நத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், சில சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வருகிறது ஆர் சி பி அணி நிர்வாகம்.
இந்நிலையில் அடுத்த சீசனுக்கான அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மாவைத் தங்கள் அணிக்குள் கொண்டுவர டிரேடிங் வாய்ப்புகளைப் பயன்படுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. திலக் வர்மாவுக்கு பதில் வேறு வீரர்களைக் கொண்டு டிரேட் செய்யப் போகிறதா இல்லை பணம் கொடுத்து வாங்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.