கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற நிலையில் அந்த வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்றும் தன் மீது எந்த வழக்கும் இல்லை என்று அவர் கூறி இருப்பதாகவும் ஆனால் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
எனவே உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது தவறானது என்றும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.