Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் குண்டுகட்டாக கைது: சென்னையில் பரபரப்பு

Advertiesment
arrest
, வியாழன், 24 நவம்பர் 2022 (14:50 IST)
ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் குண்டுகட்டாக கைது: சென்னையில் பரபரப்பு
சென்னையில் போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பெண்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் 
 
மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் இட்ட நிலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 24 பேர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர்
 
இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: அண்டை நாடு அதிரடி அறிவிப்பு