Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரட்சி தலைவி அம்மாவின் 7 ஆம் ஆண்டு நினைவு! -எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
, செவ்வாய், 5 டிசம்பர் 2023 (13:57 IST)
முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சியினர் ஜெயலிதாவின் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இன்று ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை, நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

மாண்புமிகு இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23) மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்.

அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி, மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி , மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவின் பால் அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ்