சென்னையில் மிக்ஜாம் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் உறுதியளித்துள்ளதாக' உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் கடந்த 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக மழை பதிவாகியுள்ளது.
இந்த மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் வெள்ளக்காடான சென்னை மக்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நிமியத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் 7 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளதுடன், நிவாரண பணிகளை துரிதப்படுத்த முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்தேன். ஏற்கனவே NDRF போதுமான அளவுக்கு அங்கே உள்ளது மற்றும் கூடுதல் படைகள் மேலும் உதவிக்கு தயாராக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.