Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிக்ஜாம் புயல்: அரசின் நடவடிக்கை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Advertiesment
MK Stalin
, செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:38 IST)
மிக்ஜாம்  புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வெள்ள   நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

அதில், வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போதும் தற்போது பாதிப்பு குறைவாகவே உள்ளது.

கடந்த 2015 ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகமாக உள்ளது.

2015 ல் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் உண்டான செயற்கை வெள்ளம்,. தற்போது ஏற்பட்டுள்ளது இயற்கையான வெள்ளம்.

ரூ.4000 கோடிக்கு வடிகால் பணிகளை மேற்கொண்ட காரணத்தால் தற்போது சென்னை  திரும்பியுள்ளது.

2015 வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!