Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவுக்கு உதவிய அதிமுக நிர்வாகிகள்7 பேர் ...அதிரடி நீக்கம் - இ.பி.எஸ் - ஒ.பி.எஸ்

Advertiesment
சசிகலாவுக்கு  உதவிய அதிமுக நிர்வாகிகள்7 பேர்   ...அதிரடி நீக்கம்  - இ.பி.எஸ் - ஒ.பி.எஸ்
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (21:33 IST)
சசிகலாவுக்கு வரவேற்பு அளித்து கார் வழங்கியவர்கள் 7 பேர்  அதிமுக கட்சியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று  சசிகலா பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு   வந்துக்கொண்டிருந்த  காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தினகரன் கூறியதாவது : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அதிமுக ஒன்றிய செயலாளரின் காரில் சசிகலா பயணித்தார் எனத் தெரிவித்தார்.

இதற்கு சசிகலாவிற்கு உதவிய எட்டப்பர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிசலாவுக்கு  கார் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் 7 பேர் அக்கட்சியிலிருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்மங்கி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலாவுக்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர்  வரவேற்பு அளித்தவர்கள் என மொத்தமாக 7 பேர் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் திமுக இளைஞரணி செயலாளர் விசிட் உதயநிதி ஸ்டாலின் காவலில் செந்தில்பாலாஜி??