Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’அன்புக்கு நான் அடிமை..’’விரைவில் எல்லோரையும் சந்திக்க உள்ளேன் - சசிகலா

’’அன்புக்கு நான் அடிமை..’’விரைவில் எல்லோரையும் சந்திக்க உள்ளேன் - சசிகலா
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (18:09 IST)
சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அபோது,அவர் ,நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும்,  நான் அன்புக்கு அடிமை ; அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் ;  கொண்ட கொள்கைக்கு நான் அடிமை எனத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கிறார். சசிகலா வந்துக்கொண்டிருக்கும் காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அதிமுக ஒன்றிய செயலாளரின் காரில் சசிகலா பயணித்தார். 

இதற்கு சசிகலாவிற்கு உதவிய எட்டப்பர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

இந்நிலையில், தற்போது, வாணியம்பாடி அருகே  சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும்,  நான் அன்புக்கு அடிமை ; கொண்ட கொள்கைக்கு நான் அடிமை எனத் தெரிவித்துள்ளார்

மேலும்,  கழகம் பல சோதனைகளைக் கண்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டு வந்திருக்கிறது.

புரட்சி தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம். கட்சியைக் கைப்பற்றப் போகிறார்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், விரைவில் எல்லோரையும் சந்திக்க உள்ளேன். இதுபற்றி அப்போது சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசை மீது இப்படி ஒரு காதலா? – 106 வயதிலும் ஆல்பம் வெளியிட்ட மூதாட்டி!