Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் திமுக இளைஞரணி செயலாளர் விசிட் உதயநிதி ஸ்டாலின் காவலில் செந்தில்பாலாஜி??

கரூரில் திமுக இளைஞரணி செயலாளர் விசிட் உதயநிதி ஸ்டாலின் காவலில் செந்தில்பாலாஜி??
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (21:11 IST)
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முதன்முறையாக கரூரில் வடமஞ்சுவிரட்டு நிகழ்ச்சியினை நடத்தி தமிழர்களின் வீர விளையாட்டிற்கு புத்துணர்வு கொடுத்தனர்.

ஆனால் திடீரென்று கரூர் வந்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,. கரூர் நிகழ்ச்சிகளை ஒரு நாளில் இருந்து இரண்டு நாட்களாக திமுக வின் கட்சி மாற்றியது. அதிமுக வின் வடமஞ்சு விரட்டு நிகழ்ச்சியினை ஒரங்கட்ட தான் திமுக வின் உதயநிதி ஸ்டாலினை செந்தில்பாலாஜி ஐ அழைத்து வந்துள்ளார் என்று கூறிய திமுக வினரின் டிரெண்ட், அப்படியே இன்று இரண்டாவது நாள் மாறியுள்ளது காரணம், சசிகலா, இளவரசி தமிழகம் வருகையும், அவர்களது தீவிர ஆதரவாளர் செந்தில்பாலாஜி ஏதேனும் மனமாற்றம் ஏற்பட்டு சந்தித்து விடுவாரோ, என்று தான் உதயநிதி ஸ்டாலின் காவலில் இரண்டு நாட்கள் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

காரணம், இவர் தற்போது நடைபெற்று வரும் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2011 – 2016 ஆண்டுகளில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக 4 ¾ ஆண்டுகளாகவும், அதிமுக கட்சியின் கரூர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2006 – 2011 ம் திமுக ஆட்சியில் கரூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ வாக இருந்து திமுக கட்சி மற்றும் திமுக ஆட்சியின் மணல் கொள்ளை, சட்டவிரோத பணிகளை எடுத்து கூறி வன்முறை ஏற்பட்டு அதிமுக கட்சியில் இருந்து சிறை சென்றவரும் ஆவார். திடீரென்று ஜெயலலிதாவின் மறைவு, அதிமுக கட்சி இரண்டு பட்ட போது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சென்று தகுதிநீக்க எம்.எல்.ஏ க்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்களில் ஒருவரும் ஆவார். இந்நிலையில், அதிமுக கட்சியில் கரூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக இருந்த இவர், சசிகலா, இளவரசி ஆகியோரை வைத்து அதிமுக வில் மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட செயலாளர் என்ற பொறுப்புகளை பெற்ற செந்தில்பாலாஜி, தீடீரென்று அவரது கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி பறிப்பிற்கு பின்பு அவர், டி.டி.வி தினகரன் கட்சியை தேர்ந்தெடுத்து அங்கு சென்று, பின்னர் திமுக வில் சுமார் ஆயிரம் நபர்களை கொண்டு சேர்த்து திமுக கட்சியில் மாவட்ட செயலாளராகவும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக எம்.எல்.ஏ வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அவ்வப்போது திமுக தலைமைக்கு மிகுந்த நெறுக்கடி கொடுத்து வந்தவரும் ஆவார், என்னவென்றால் தன்னுடன் அதிமுக,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பயணித்த சக நண்பர்களுக்கு திமுக கட்சியில் பதவி வாங்கி கொடுத்ததோடு., மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் நடந்து கொள்வது ஒருபுறமும் அவர்கள் பலமுறை கட்சியின் தலைமைக்கு சொல்லி கேட்காத தலைமை மற்றும் செந்தில்பாலாஜியை கண்டித்து அதிமுக வில் தினந்தினம் இணைந்து வரும் மாற்றுக்கட்சியினரின் செய்தியால் கட்சியின் தலைமை கடும் அப்செட் என்கின்றனர் மூத்த திமுக நிர்வாகிகள், இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வந்தது மூத்த நிர்வாகிகளிடம் சமாதான பேச்சுவார்த்தைக்காகவும், சசிகலா, இளவரசி தமிழகம் வருவதையடுத்து பழைய விஸ்வாசத்தில் மீண்டும் செந்தில்பாலாஜி சென்று விடக்கூடாது என்பதற்காக தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் காவலில் செந்தில்பாலாஜி உள்ளார் என்றும் திமுக வினர் மிகைப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே செந்தில்பாலாஜி, பா.ஜ.க கட்சிக்கு மாற பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்து வருவதாகவும், மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சிக்கு மாற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூக வளைதளங்களான பேஸ்புக், டிவிட்டர்களில் வைரலாகி அது பத்திக்கைகளில் வந்த்து குறிப்பிடத்தக்கது   
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த தயார்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!