Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

bus
, வியாழன், 5 அக்டோபர் 2023 (16:27 IST)
வார கறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்‌போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ அவர்கள்‌ தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 

07/10/2023 (சனிக்கிழமை) மற்றும்‌ 08/10/2023 (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு 06/10/2023 அன்று சென்னையிலிருந்தும்‌ மற்றும்‌ பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது..

'இதனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின்‌ முக்கிய இடங்களுக்கு, 06/10/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன்‌ கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும்‌ மற்றும்‌ பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி , சேலம்‌ போண்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும்‌ மற்றும்‌ பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும்‌ 300 சிறப்பு பேருந்துகளும்‌ ஆக மொத்தம்‌ 600 பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்‌, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை மற்றும்‌ பெங்களூர்‌ திரும்ப வசதியாக பயணிகளின்‌ தேவைகேற்ப அணைத்து இடங்களிலிருந்தும்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

இந்நிலையில்‌ , இந்த வார இறுதியில்‌ பயணம்‌ மேற்கொள்வதற்கு இதுவரை 6,896 பயணிகள்‌ முன்பதிவு செய்துள்ளனர்‌. இந்த எண்ணிக்கை மேலும்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்‌, தொலைதூர பயணம்‌ மேற்கொள்ள இருக்கும்‌ பயணிகள்‌ தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும்‌ போதிய அலுவலர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. எனவே, பயணிகள்‌ மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை திட்டமிட்டுக்‌ கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் நாய்க்கடி....