இத்தாலி நாட்டில் கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு வடக்கு இத்தாலியில் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து சாலையை விட்டு விலகி விழுந்ததாக தகவல் வெளியாகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.