Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் விடியா திமுக அரசு-எடப்பாடி பழனிசாமி

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் விடியா திமுக அரசு-எடப்பாடி பழனிசாமி
, திங்கள், 2 அக்டோபர் 2023 (13:10 IST)
அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் விடியா திமுக அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதன்மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஏற்கனவே, தொழிலாளர் துரோக விடியா திமுக அரசு, அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில், திமுக-வின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மவுனம் காக்கின்றன.
 
அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் விடியா திமுக அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்றும்; பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும்; 
 
போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து, 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள சுமார் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி