Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000 கடன் - கமல்ஹாசன் டுவீட்

Advertiesment
kamalhasan
, வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (21:49 IST)
தமிழக சட்டசபையில் இன்று , துணை முதல்வர் பன்னீர்செல்வம் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சாங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம் என ஒரு பதிவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. 
 
இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே.  இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம்.  மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். மக்கள் நீதி மய்யம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிறை... ஆந்திர மாநில முதல்வர் அதிரடி !