டிவி சீரியல் பார்க்கும் பெண்களுக்கு நித்தியானந்தா அட்வைஸ் !

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (17:02 IST)
டிவி சீரியல் பார்க்கும் பெண்களுக்கு நித்தியானந்தா அட்வைஸ்
பல்வேறு  வழக்குகளில்  சர்வதேச போலீஸார் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, டிவி சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டல் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
சர்வதேச போலீஸார், நித்யானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இருப்பினும் அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அவர், கைலாசம் என்ற தனித்தீவு வாங்கியதாக கூறப்பட்ட ஈக்வெடார் அரசும் இதனை மறுத்துள்ளது.
 
இந்நிலையில், அவர் தான் நட்த்தி வரும் சத் சங்கம் மூலமாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
இன்று, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், டிவி சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டலடித்துள்ளார். அதில், டிசி சீரியல் பார்த்து நகை புடவைகள் கேட்கும் பெண்களால் கணவர்கள் எல்லாம் புலம்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், CONCIOUS ENERGY BLUE PRINT என்ற உயிர் மூல சக்தி கிடைக்க வேண்டும் எனில் டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். தான் கைலாச நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அதில் ஞானப்பால் குடிக்க விரும்புகிறவர்கள் அங்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 108 MP கேமராவுடன் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: விலை என்ன தெரியுமா??