Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா  -  பட்ஜெட்டில் அறிவிப்பு
, வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (18:18 IST)
Budget Notice on Government Buses Budget Announcement

தமிழக சட்டசபையில் இன்று , துணை முதல்வர் பன்னீர்செல்வம் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, அரசு பேருந்துகளில் கேமரா பொருத்தப்படும் என அறிவித்துள்ளார். 
 
2020 - 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
அதில், பெண்களின் பாதுக்காப்புக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு ரூ.329.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது எனவும், காவல்துறைக்கு ரூ. 8876.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ. 500 கோடியும் மின்சாரத்துறைக்கு ரூ20,115.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுக்காப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4997 கோடி விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்பாண்டர்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாதங்களில் ரூ. 2313 கோடி லாபம் அடைந்த நிறுவனம் !