Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா தேவி விவகாரம்: தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க 4 தனிப்படைகள்

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (18:54 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானதாக கூறப்பகிகிறது.
 
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாகவுள்ள இருவரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments