தென்காசி அருகே இரண்டு நாட்களில் 35 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, அந்த பகுதி மக்கள் மத்தியில் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் என்ற பகுதியில் நாய் தொல்லைகள் அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாக மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 35 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாய்க்கடி பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் நாய்களின் தொல்லைகளை ஒழிக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இரண்டே நாட்களில் 35 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.