Publish Date: Tue, 19 Sep 2023 (14:13 IST)
Updated Date: Tue, 19 Sep 2023 (14:16 IST)
திருப்பதி நகர பொதுமக்களின் நலனுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி நகராட்சியுடன் இணைந்து புதிய மேம்பாலத்தை கட்டி கொடுத்துள்ளது.
இந்த மேம்பாலத்தின் மதிப்பு 650 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதால் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனிவாச சேது என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி நகராட்சியுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் கட்டிக் கொடுத்துள்ள இந்த மேம்பாலத்தை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.