டைடல்பார்க் - சோழிங்கநல்லூர் இடையே நான்கு புதிய பாலங்கள் அமைக்க ரூபாய் 451.59 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சோழிங்கநல்லூர் இடையில் நான்கு சந்திப்புகளில் 459.32 கோடி ரூபாயில் புதிய பாலங்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இணைந்து முடிவு செய்துள்ளது.
மத்திய கைலாஷில் இருந்து தொடங்கும் இந்த பாலம் பழைய மகாபலிபுரம் சாலை தரமணி பெருங்குடி துரைப்பாக்கம் சோளிங்கநல்லூர் சிறுசேரி என அனைத்து வர்த்தக பகுதிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் இந்த சாலையில் பயணம் செய்வதால் பாலம் கட்டிய பிறகு வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் பாதைக்கான தூண்கள் அமைக்கும் போது பாலத்துக்கான தூண்களையும் அமைத்து இரு பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.