கேரளாவின் வாகமன் எனற பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான இந்த கண்ணாடி பாலத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்
40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ரூ3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கேரள மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.