Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (07:48 IST)
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் இன்றும், ஜூன் 7ஆம் தேதியும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:  சென்னை கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 5, 7 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது. 
 
இதனால், இப்பணிகள் நடைபெறும் நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். 
 
அதேபோல் கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
 
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன
 
எழும்பூா் - புதுச்சேரி  ரயில்: இதற்கிடையே எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைக்கும் பணிகள் ஜூன் 5 முதல் ஆக. 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 
 
இதனால் அந்த நாள்களில் எழும்பூரிலிருந்து காலை 6.24-க்கு புதுச்சேரிக்கு செல்லும்  மெமு பயணிகள் ரயில் (எண்: 66051) எழும்பூருக்கு பதிலாக கடற்கரையிலிருந்து காலை 6.25-க்கு புறப்படும். மறுமாா்க்கமாக புதுச்சேரியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 66052) கடற்கரை வரை இயக்கப்படும். 
 
இந்த ரயில் இருமாா்க்கத்திலும் கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments