நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (07:38 IST)
2025ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், நீட் தேர்வு முடிவு வருவதற்கு முன்பே எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிசல்ட் வருவதற்கு முன்பே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments