Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

Advertiesment
சென்னை ரெயில்

Mahendran

, புதன், 21 மே 2025 (11:37 IST)
சென்னை நகரம் மற்றும் புறநகரங்களை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சேவையை நம்பி பயணம் செய்கின்றனர். தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டத்தில், நாள்தோறும் 60க்கும் அதிகமான மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
 
இந்த நிலையில், பல்லாவரம் ரயில் நிலையத்தில் எதிர்பாராத நிகழ்வொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே தண்டவாளத்தில் இரண்டு மின்சார ரயில்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, இரண்டும் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கமான நேரத்தை விட ஒரு ரயில் முன்கூட்டியே வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, "இது ஒரே முறை நடக்கவில்லை; அடிக்கடி நடைபெறும் விஷயம்" எனப் பயணிகள் அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம் சாட்டினர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!