சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மின்சார ரயிலில், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஆவடியில் இருந்து கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று, ராயபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சக்கரத்தில் இருந்து விலகி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஆவடி–கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.