Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து செல்லும் 14 வயது வீரர் விஷால்...

Advertiesment
சர்வதேச அளவு
, திங்கள், 2 மார்ச் 2020 (21:57 IST)
சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து செல்லும் 14 வயது வீரர் விஷால்...

வரும் 9 ம் தேதி சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து செல்லும் 14 வயது கரூர் வீரர் விஷால் ஒரு சிறப்பு பார்வை.

கரூர் ரங்கசாமி நகரில் வசிப்பவர் செந்தில்குமார், டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். செந்தில்குமாரின் மனைவி கீர்த்தி இவரது மூத்த மகன் விஷால் (வயது 14), இங்குள்ள மண்மங்கலம் ஜி பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வரும் இவர், வரும் 9 ம் தேதி நடைபெற உள்ள தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் இதே கரூரில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியின் சீனியர் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.

மேலும், 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்ற நிலையில், தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அசோஷியேசன் சார்பில் தமிழக அணிக்கு இந்த விஷால் என்கின்ற வீரரும், வேலூரை சார்ந்த இரு  வீராங்கனைகளும் ஆகிய மூவரும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமில்லாமல், டெல்லியினை சார்ந்த இருவர் என்று மொத்தம் 6 நபர்கள் தாய்லாந்துவிற்கு செல்ல உள்ளனர். வர்டும் 9 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணிக்காக பங்கேற்கும் விஷால் தற்போது தனது பயிற்சியினை தீவிரமாக்கி வருகின்றார். இவரது பயிற்சியாளர் குமார் ஊக்குவிப்போடு, தனது தந்தை செந்தில்குமார், தாய் கீர்த்தி ஆகியோரின் ஊக்கத்தினாலும், இவரது தங்கை ரியா (வயது 6) ஆகியோரின் அரவணைப்பில் முழு ஈடுபட்டில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிட வேண்டாம் - வைரமுத்து