Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Advertiesment
மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
, சனி, 29 பிப்ரவரி 2020 (22:05 IST)
மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - உடலை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி எழில் நகரில் வசிப்பவர் சேகர். வயது 64. கரூர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வு பெற்ற பிறகு தனது மனைவி கிருஷ்ணவேனியுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் மரக்கன்று நடுதல், அப்பகுதியில் உள்ள கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உதவி செய்வது என சமூக அக்கரையுள்ள பணிகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகன் பாலசந்திரன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்து இருந்த தம்பதியினர் இன்று அதிகாலையில் கரூர் திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று அந்தப் பகுதியை கடக்க முயன்ற பொதுமக்கள் சடலங்களை பார்த்து பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசாரும், ரயில்வே போலீசாரும் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பொதுக் காரியங்களில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருக்குறளை தேசிய நூலாக்குவோம் என்று முழக்கமிட்ட மாணவ, மாணவிகள் !