Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருக்குறளை தேசிய நூலாக்குவோம் என்று முழக்கமிட்ட மாணவ, மாணவிகள் !

திருக்குறளை தேசிய நூலாக்குவோம் என்று முழக்கமிட்ட மாணவ, மாணவிகள் !
, சனி, 29 பிப்ரவரி 2020 (21:57 IST)
திருக்குறளை தேசிய நூலாக்குவோம் என்று முழக்கமிட்ட மாணவ, மாணவிகள்
விளம்பர நிறுவனங்களின் பெயரை தமிழ்வழியில் வைத்திடுவோம் ! திருக்குறளை தேசிய நூலாக்குவோம் என்று முழக்கமிட்ட மாணவ, மாணவிகள் ! 
 
கரூரில் தமிழ் ஆட்சி மொழி வார விழாவை முன்னிட்டு, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு பேரணி தான்தோன்றி மலையில் இருந்து கரூர் அரசு கலை கல்லூரி நடந்த பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
 
கரூரில் தமிழ்வளர்ச்சித்துறை நடத்தும் தமிழ் ஆட்சிமொழி வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்து துவங்கி வைத்தார்  கரூர் அரசு கலைக் கல்லூரி  முதல்வர் பொறுப்பு ராதாகிருஷ்ணன் இப்பேரணி முடிவில் திருக்குறள் பேரவை தலைவர்  மேலை பழனியப்பன் அவர்கள்  செய்தியாளர்களிடம் தெரிவித்த போது  இதில் கடந்த ஒரு வார காலமாக எல்லா மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழ் ஆட்சிமொழி வார விழா கடந்த ஒரு வாரமாக எல்லா மாவட்டத்திலும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அதன் இணை இயக்குனர் அன்புச்செழியன்  வழிகாட்டுதலின்படி பல்வேறு வகையான விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று. இதில் 1330 திருக்குறள் சொல்லும் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டு தமிழில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் எழுதுவதற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு இன்றைய தினம் கரூர் அரசு கலைக்கல்லூரியின் மாணவ,மாணவிகளின், பேராசிரியர்கள் கரூர் மாவட்டத்தின் தமிழ் ஆர்வலர்கள்,  தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சித்துறை யோடு இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை தமிழ் வாழ்க என்றும் தமிழில் பெயரிடுவோம் என்றும் தலைப்பு எழுத்தை தமிழிலேயே எழுதுவோம் என்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் எழுதுவோம் என்றும் திருக்குறளை தேசிய நூலாக ஆக்குவோம் என்றும் முழக்கமிட்ட வண்ணம் பேரணியாக வலம் வந்த மாணவ, மாணவியர்கள் பேரணியில் நூதன விழிப்புணர்வு மேற்கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் சுதா மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவரம் ரசாயன கிடங்கில் தீ: இரவு முழுவதும் எரிய வாய்ப்பு என தகவல்