Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது வெற்றி பட்ஜெட் இல்லை: வெத்து பட்ஜெட்: மார்க்சிஸ்ட் கடும் தாக்கு

இது வெற்றி பட்ஜெட் இல்லை: வெத்து பட்ஜெட்: மார்க்சிஸ்ட் கடும் தாக்கு
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (14:43 IST)
மத்திய அரசின் இந்த பட்ஜெட்டானது வெறும் வெத்து  பட்ஜெட் தான் என  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகளுக்கான நலத்திடங்கள் அறிவிக்கப்பட்டது 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 
 
பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு எனும் சிறப்புத் திட்டம். விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலப் பொதுச்செயலாளரான கே.பாலகிருஷ்ணன், இது வெறும் வெத்து பட்ஜெட் தான். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கொடுக்கப்போகிறார்களாம், 6000 ஒரு பணமா? மத்திய அரசு விவசாயிகளை எப்படி நினைக்கிறது. இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை என பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம்...பெட்ரோல் விலை குறையுமா...? வாகன ஓட்டிகள் ஆர்வம்