மத்திய இடைக்கால பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
2019-20-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக நிதியமைச்சரே பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதியமைச்சரான பியுஷ் கோயல் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவர பல்வேறு அம்சங்கள் கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள், சிறு குறு விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் என பல தரப்பினர் பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.