Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் ?

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் ?
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (11:19 IST)
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக இந்த முறை பலமானக் கூட்டணியை அமைத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் இதில் காங்கிரஸுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் தொகுதி உள் பங்கீடு செய்து கூட்டணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தனது கூட்டணிக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஒன்றை அறிவித்தது.
webdunia

அந்தக் குழு இப்போது கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கிட்டதட்ட இறுதி முடிவை எடுக்கும் கட்டத்தில் உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஆரம்பக்கட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் சிலப் பிரச்ச்னைகள் எழுந்தாலும் திமுகவின் தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைப்படி இப்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதன் படி இப்போது நிலவரப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கைக் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
webdunia

அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும்  1 இடமும் , மதிமுக வுக்கு 1 இடமும் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு  1 இடமும் , முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடமும் என மொத்தம் 14 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதனைக் கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ள 26 தொகுதிகளில் திமுக போட்டியிட இருப்பதாகத் தெரிகிறது.

இதனையடுத்து எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை இப்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதுவும் முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#Budget2019; லீக்கான அம்சங்கள்: பாஜகவிற்கு ஷாக்!